தேவதானப்பட்டியில் விஷம் குடித்து பெண் சாவு
தேவதானப்பட்டியில் விஷம் குடித்து பெண் இறந்துபோனார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ரத்தினம் (வயது 47). கடந்த ஆண்டு ராஜா, அதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியிருந்தார். அந்த கடனை அவரால் குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பி செலுத்தமுடியவில்லை. இதனால் பாண்டி அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜா பள்ளங்கி பகுதிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரத்தினம் மட்டும் இருந்தார். அப்போது அங்கு வந்த பாண்டி, ராஜாவின் வீட்டில் இருந்த 2 உழவு மாடுகளை பிடித்து சென்றார். கொடுத்த கடனை திருப்பி செலுத்திவிட்டு, மாடுகளை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறிச்சென்றார். மாடுகளை பிடித்து சென்றதால் ரத்தினம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இதனால் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story