பிளஸ்1 மாணவர் தற்கொலை


பிளஸ்1 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2021 10:15 PM IST (Updated: 3 Dec 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே பிளஸ்-1 மாணவர் ஒருவர் விஷ கிழங்கை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

வடமதுரை: 

வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி புளியம்பட்டியை சேர்ந்த சின்னக்கண்ணு மகன் செல்லதுரை (வயது 17). இவர் செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர், தனது செல்போனில் அடிக்கடி வீடியோகேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் அழகம்மாள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்லதுரை கடந்த 1-ந்தேதி விஷக் கிழங்கை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் செல்லதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story