சென்னையை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது
சென்னையை சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அஞ்சல் ரெட்டி குப்பம் அருகே உள்ள காணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் என்பவரின் மகன் ஏழுமலை பெஞ்சமின் (வயது 51). இவர் தான் சென்னையில் கல்வித் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறி ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக போலி நியமன ஆணை வழங்கி ரூ.40 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை கைது செய்து விருதுநகர் சிறையில் அடைத்தனர். அவரை ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசார ணையில் அவர் போலி நியமன ஆணைகளை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் ஜாவித் (40) என்பவரிடம் அவரின் ஜெராக்ஸ் கடையில் வைத்து தயார் செய்ததும், இதற்கான அரசு முத்திரைகளை திருவான்மியூர் வால்மீகி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பத்மநாபன் (45) என்பவர் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட பத்மநாபன் மற்றும் ஜாவித் அலி ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் கைது செய்தனர். இதில் ஜாவித்அலியிடமிருந்து போலி நியமன ஆணைகள் அடங்கிய கணனி கருவிகளும், ஆவணங்களும் மற்றும் பத்மநாபனிடம் இருந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர் போன்ற 5 மாவட்ட கலெக்டர் அலுவலக போலி அரசு முத்திரை களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story