திண்டிவனம் ஆசிரியர் உள்ளிட்டோரிடம் ரூ.60 லட்சம் கொள்ளை


திண்டிவனம் ஆசிரியர் உள்ளிட்டோரிடம் ரூ.60 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 3 Dec 2021 10:19 PM IST (Updated: 3 Dec 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் ஆசிரியர் உள்ளிட்டோரிடம் ரூ.60 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டிவனம், 

திண்டிவனம் மரக்காணம் ரோடு விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் சேகர்(வயது 42). வாகனங்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.7 லட்சத்து 50 ஆயிரம், டி.வி. நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சரவணன்(50) என்பவரின் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த ரூ.97 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இது தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

3 பேர் கைது 

விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ரவி மகன் ராஜி(22), பாவுல்ரா மகன் சக்ராயா(44), மோரிஷ் மகன் ரமேஷ்(39) ஆகியோர் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார்        கைது செய்தனர்.  அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, சென்னை, புதுச்சேரி, கடலூர், மதுரை, விருதுநகர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து வருபவர்களை நோட்டமிட்டு ரூ.60 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்ததும், இவர்களுக்கு சென்னையை சேர்ந்த குமார்(35) என்பவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story