அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு பாலிடெக்னிக் கல்லூாி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு பாலிடெக்னிக் கல்லூாி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும், கல்லூரியில் அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி -சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பா.ஆனந்த், தலைமை தாங்கினர். ராட்டத்தில் மாநில துணை செயலாளர் ஆறு. பிரகாஷ்மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காத்து நின்றன.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், மற்றும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் நடராஜன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் பஸ் வசதி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story