சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
சங்கராபுரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 4 பேர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் கட்டுவதற்காக வைத்திருந்த படிக் கல்லை அதே ஊரைச் சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் மணியரசு(வயது 24) என்பவர் எடுத்து சாக்கடையின் மேல் நடந்து செல்வதற்காக போட்டுள்ளார். இதை அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள்(42) என்பவரின் உறவினர் செல்வராஜ் என்பவர் தட்டிக்கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணியரசு செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் காயம் அடைந்த செல்வராஜ் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு சங்கராபுரம்-பூட்டை சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் இளையபெருமாளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணியரசு மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் இருவரையும் திட்டி தாக்கி மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து இளையபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் மணியரசு உள்பட 11 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப் பதிவு செய்து மணியரசு, அப்பாதுரை(39), தங்கவேலு(53), அய்யனார்(28) ஆகிய 4 பேரை கைது செய்தார். அதேபோல் தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்களை தாக்கியதாக அப்பாதுரை கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ், இளையபெருமாள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story