கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரம்
திருவாரூர் பகுதியில்கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்;
திருவாரூர் பகுதியில்கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டி தொங்க விடப்படுவது வழக்கம். ஆண்டுேதாறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவாரூர் கடைவீதியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இதனால் திருவாரூர் மாவட்ட கடைவீதியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் மரங்கள்
இந்த ஸ்டார்கள் ரூ.60 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதையும் மக்கள் வாங்கி சென்று தங்கள் வீடுகளில் வைத்து உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பல விதமான கேக்குகளை வாங்குவதற்கு பேக்கிரி கடைகளில் அதிக அளவில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் அனைவரையும் கவரும் வகையில் பல வண்ண டிசைன்களில் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்வதற்கு பேக்கிரி கடைகள் தயார் நிலையில் உள்ளது.
Related Tags :
Next Story