ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
விடுதிகளில் சேரவிரும்பும் மாணவர்கள் தங்களது புகைப்படம், குடும்ப வருமான சான்று, சாதிச்சான்று, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story