பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்,
முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை உடனே நடத்தக் கோரி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் நேற்று பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர்கள் சங்கம் சார்பில் டீன் அலுவலகம் முன்பு நடந்தது. இதில் ஏராளமான பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆசாாிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சுமார் 80 பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் டாக்டர்களுடன் சேர்ந்து பொது சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிாிவுகளில் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் நேற்று பயிற்சி டாக்டர்கள் பணிக்கு வராததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாக இருந்துள்ளது. எனினும் நோயாளிகள் யாரும் பாதிக்கப்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story