மணல் கடத்திய வாகனம் பறிமுதல்


மணல் கடத்திய வாகனம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2021 11:20 PM IST (Updated: 3 Dec 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் கிராமத்திற்கு உட்பட்ட விருசுழி ஆற்றில் மணல் திருட்டுத்தனமாக அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி பிரகாஷ் கண்டரமாணிக்கம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். மேலும் சோதனையின் போது சாக்கு பைகளில் சுமார் 35 மூடைகளில் ஆற்று மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர் கண்டரமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாங்குடி கிராமத்தை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்தி (வயது30) ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், மணல் மூடை களையும் கைப்பற்றிய திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story