தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Dec 2021 12:01 AM IST (Updated: 4 Dec 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

வடிகால் வசதி செய்து தரப்படுமா?

கண்ணமங்கலம் அருகில் உள்ள குப்பம் கிராமத்தில் படவேடு செல்லும் ரோட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் சாலையில் மழைநீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். சாலையில் தேங்கி உள்ள மழைநீர் வடிய வடிகால் வசதி செய்து தரப்படுமா?

  -முருகன், குப்பம்.

சாலையை சீர் செய்து தர வேண்டும்

  ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரத்தில் இருந்து திருவலம் மேம்பாலம் இ.பி.கூட்ரோடு வரை சாலை பழுந்தடைந்துள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை பழுதால் சீரான வேகத்திலும், அவசரத்துக்கு குறிப்பிட்ட நேரத்திலும் செல்ல முடியவில்லை. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீர் செய்வார்களா?
  -ஜான், திருவலம்.

 சிமெண்டு சாலை போட வேண்டும்

  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் கொடைக்கால் கிராமத்தில் ஆண்டி தெருவின் நுழைவு பகுதியில் மேடும் பள்ளமுமாக சாலை உள்ளது. அந்த வழியாக 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. குழந்தைகள் தெருவில் விளையாட முடியவில்லை. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எங்கள் தெருவில் பக்க கால்வாயை உயர்த்தி கட்டி, சிமெண்டு சாலை போட வேண்டும்.
  -குமரன், கொடைக்கால்.

 சாலை, கால்வாயை சீர் செய்வார்களா?

  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திருவி.க.நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாலை சில ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் உள்ளது. சாக்கடை கால்வாயும் தூர்வாரப்படாமல் உள்ளது. மழை பெய்யும் நேரத்தில் கழிவுநீர் வழிந்து சாலையில் ஓடும். இதனால் துர்நாற்றம் வீசும். எனவே எங்கள் தெருவில் சாலை மற்றும் கால்வாயை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  -அம்மார்கஹேப், பேரணாம்பட்டு.
  

Next Story