மேட்டுப்பட்டி சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும்-கிராம மக்கள் மனு


மேட்டுப்பட்டி சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும்-கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 4 Dec 2021 12:15 AM IST (Updated: 4 Dec 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பட்டி சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கரூர், 
வெள்ளியணை வடக்கு மேட்டுப்பட்டி கிராம மக்கள் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட முகவரியில் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகிறோம். குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர் என அனைவரும் எந்தவொரு பாகுபாடுமின்றி, சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடனும், எந்த கருத்து வேறுபாடு இல்லாமல் எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர், சாலை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட எண்ணற்ற தேவைகளை அனைத்து தரப்பு மக்களோடு ஒருங்கிணைந்து போராடி பெற்றிருக்கிறோம்.
இந்த நிலையில் ஒருசிலர் சாதி பிரச்சினையை ஏற்படுத்தி இரு இனத்தவரை பிரிக்க பார்க்கிறார்கள். எங்கள் பகுதி மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பேசி தீர்க்க, சமரசம் செய்ய நாங்கள் ஒருமித்த கருத்தோடு அனைவரும் இருப்போம். எனவே வடக்கு மேட்டுப்பட்டி சம்பவம் குறித்து உண்மை தன்மையை விசாரித்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story