மாவட்ட செய்திகள்

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல்; 56 பேர் கைது + "||" + Roadblock

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல்; 56 பேர் கைது

கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல்; 56 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர், 
மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலாளர் முருகேசன் உள்பட கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் சட்டங்களை திருத்தி நலவாரியங்களை சீரழிக்க கூடாது. பெண்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 33 பெண்கள் உள்பட 56 பேரை கைது செய்து போலீஸ் பஸ்சில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னதாக பணிக்கு வர சொன்னதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்; பவானிசாகர் அருகே பரபரப்பு
பவானிசாகா் அருகே முன்னதாக பணிக்கு வர சொன்னதால் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
2. நெடுஞ்சாலை பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் மறியல்
நெடுஞ்சாலை பணி நடக்கும் இடத்தில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
3. பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் மறியல்
பண்ருட்டியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல்
திருச்சியில் 4 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
5. பெண்கள் திடீர் சாலை மறியல்
ஆலங்குளம் அருகே பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.