லாரி மோதி தொழிலாளி பலி
ராஜபாளையம் அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் ராஜபாளையத்திற்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது முதுகுடியை அடுத்து நல்லமநாயக்கன்பட்டி செல்லும் திருப்பத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஜல்லி கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரி இவர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜகுரு (45) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story