சவேரியார் ஆலய தேர்பவனி


சவேரியார் ஆலய தேர்பவனி
x
தினத்தந்தி 4 Dec 2021 12:58 AM IST (Updated: 4 Dec 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது

ஆவூர்
விராலிமலை தாலுகா, மலம்பட்டியில் புகழ்பெற்ற புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பல்வேறு பங்குத் தந்தைகள் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். கடந்த 1-ந் தேதி மாலை முன்னாள் பங்கு தந்தையும், திருச்சி திருநகர் ஆலய பங்குத்தந்தையுமான இரட்சகராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கலையரங்கில் கலை நிகழ்ச்சியும், அன்று இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட 3 சப்பரங்களின் பவனி நடைபெற்றது. 2-ந் தேதி காலை மற்றும் மாலையில் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் கலந்து கொண்ட திருப்பலியும், அதனைத்தொடர்ந்து பட்டிமன்றமும் நடைபெற்றது. பின்னர் இரவு 12 மணியளவில் சப்பர பவனி நடைபெற்றது. நேற்று காலை அருட்தந்தையர்கள் இன்னாசிமுத்து, கீரனூர் மறைவட்ட அதிபர் அருளானந்தம் ஆகியோர் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க பங்கு தந்தையர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இன்னாசியார், மாதா, சவேரியார் ஆகிய 3 சொரூபங்களின் தேர்பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனி மதியம் 1.45 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஆலயத்திற்கு காணிக்கையாக செலுத்திய ஆடு, மாடு, கோழிகள் ஆகியவற்றின் ஏலம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது. 



Next Story