வீட்டின் பூட்டை உடைத்து தாலி- தங்கக்காசுகள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து தாலி- தங்கக்காசுகள் திருட்டு
x
தினத்தந்தி 4 Dec 2021 1:23 AM IST (Updated: 4 Dec 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து தாலி- தங்கக்காசுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

குன்னம்:

பூட்டு உடைப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 43). விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சிவா, சுந்தர் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரி தோட்டத்திற்கும், சிவா பெரம்பலூரில் உள்ள கல்லூரிக்கும், சுந்தர் குன்னத்தில் உள்ள பள்ளிக்கும் சென்றுவிட்டனர். சின்னதுரை வீட்டை பூட்டிவிட்டு மாடு மேய்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில் சிவா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
திருட்டு
இதையடுத்து சின்னதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் இரண்டரை பவுன் எடையுள்ள 8 தங்கக்காசுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story