புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 8:40 PM GMT (Updated: 3 Dec 2021 8:40 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடைந்த தரைப்பாலம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கருங்காலக்குடியில் உள்ள தரைப்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதுநாள் வரை அது சீரமைக்கப்படவில்லை. இவ்வழியாக இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளும், சிறுவர், சிறுமிகளும் கால்வாயில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பாக உடைந்த தரைப்பாலத்தை சீரமைப்பார்களா? 
பொதுமக்கள், கருங்காலக்குடி. 
----------
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா தொப்பலக்கரை ஊராட்சியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜேந்திரன், தொப்பலக்கரை. 
========== 
சுரங்கப்பாதையில் தண்ணீர் 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டை கிராமத்தில் 4 வழிச்சாலை அருகில் ெரயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் எப்போதும் தண்ணீர் தேங்்கி குளம்போல மாறி விடுகிறது. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? 
வேல்முருகன், மேலக்கோட்டை. 
========== 
கண்மாயில் உடைப்பு 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் படிக்காசு வைத்தான்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலன்குளம் கண்மாய் தற்போது நிரம்பி வருகிறது. இந்நிலையில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
தேன்கனி, இனாம்கரிசல்குளம். 
========== 
ஆபத்தான சுற்றுச்சுவர் 
ராமநாதபுரம் மாவட்டம் நென்மேனி கிராமத்தில் இன்னாசியர் கோவில் அருகில் உள்ள சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. அது எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன்தான் சென்று வருகின்றனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். 
பொதுமக்கள், நென்மேனி. 
========== 
தேங்கி நிற்கும் மழைநீர் 
மதுரை மாவட்டம் பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தம் அவென்யு 8-வது தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. கொசுக்கடியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பொதும்பு. 
=========== 
கொசுத்தொல்லை 
விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பேயம்பட்டி மாருதி காலனியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
விஜயன், பேயம்பட்டி.
============ 
வீணாகும் குடிநீர் 
மதுரை மாவட்டம்,சி முனிச்சாலை அருகில் உள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் வீணாகி சாலையில் ஆறு போல ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் கிடைப்பதால் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
கண்ணன், மதுரை. 
============ 
 சேறும், சகதியுமான சாலை 
மதுரை எல்லீஸ் நகர் ஆஞ்சநேயர் ேகாவில் அருகில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சேற்றில் விழும் சம்பவமும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இப்பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும். 
பிரவீன், மதுரை. 
============= 
அடிப்படை வசதி ேதவை 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனி அருந்ததியர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருவிளக்குகள், குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதிகும் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
முத்து, வெற்றிலையூரணி. 
============ 

Next Story