அதிகபட்சமாக பாலமோரில் 46 மி மீ பதிவு
அதிகபட்சமாக பாலமோரில் 46 மி மீ பதிவு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 2 நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பரவலாக பெய்தது. நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதே போல அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 46.4 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போன்று பூதப்பாண்டி-3.2, களியல்-12.4, கன்னிமார்-2, கொட்டாரம் 42.4, மயிலாடி-22.4, நாகர்கோவில்-36.8, புத்தன்அணை-13.4, சுருளகோடு-44.2, தக்கலை-5.4, இரணியல்-4.6, கோழிபோர்விளை-11, அடையாமடை-34, குருந்தன்கோடு-15.2, ஆனைக்கிடங்கு-26.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது. மேலும் பெருஞ்சாணி-14.2, சிற்றார் 2-36.8, முக்கடல்-3.1 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிைடயே வெள்ளம் குறைந்த பின்பு குளிக்க அனுமதி கிடைக்குமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு பல்வேறு இடங்களில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் மேலும் 7 வீடுகள் சேதம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகாவில் 6 வீடுகளும் சேதமடைந்து உள்ளன.
Related Tags :
Next Story