கோலாரில் தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
கோலாரில் தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
கோலார் தங்கவயல்: கோலாரில் தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற வழக்கில் போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
தொழில் அதிபர்
பெங்களூரு ஒசக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சபீர் பெய்க். தொழில் அதிபர். கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இவர் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். அவர் கோலார் மாவட்டம் மாலூர் அருகே சிக்ககுண்டூர் பகுதியில் இரவு நேரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது காரை போலீஸ் உடையில் இருந்த ஒருவர் வழிமறித்தார். அதன்பேரில் சபீர் பெய்க் காரை நிறுத்தினார்.
இதையடுத்து அங்கு மேலும் 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களை ஆந்திர போலீசார் என்றும், கார்களில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சபீர் பெய்க்கிடம் கூறினர். அவர்கள் கூறியதன்பேரில் சபீர் பெய்க் காரில் இருந்து கீழே இறங்கினார்.
கொலை மிரட்டல்
அப்போது அவரை அந்த நபர்கள் 6 பேரும் சேர்ந்து தாக்கினர். பின்னர் அவரை அவரது காரிலேயே கடத்தினர். அவரிடமிருந்து செல்போன், ரூ.1,700 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் அவரது செல்போன் மூலம், அவருடைய சகோதரரை தொடர்பு கொண்டு பேசி மிரட்டினர். அப்போது சபீர் பெய்க்கை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டு மிரட்டல் விடுத்தனர். பணம் கொடுக்கவில்லை என்றால் சபீர் பெய்க்கை கொன்றுவிடுவோம் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதையடுத்து அன்று இரவு முழுவதும் அவரை காரில் வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து பணம் பறிக்க முயன்றனர். பின்னர் விடிந்தவுடன் அவரை சரமாரியாக தாக்கி பெங்களூரு அருகே விடுவித்து, நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே சொல்லக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
வலைவீச்சு
இதுபற்றி சபீர் பெய்க், கோலார் மாவட்டம் கல்பேட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 6 பேரையும் வலைவீசி தேடிவந்தனர்.
போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது சபீர் பெய்க்கை கடத்தி பணம் பறிக்க முயன்றது கோலார் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்களான வேணுகோபால், பசவராஜு, அரசு போக்குவரத்து கழக ஊழியர் பசவராஜ், பெஸ்காம் ஊழியர்கள் மார்க்கண்டா, ஹர்ஷத், வனக்காவலர் நவீன் ஆகியோர் என்பதும், நண்பர்களான இவர்கள் விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பணம் பறிப்பு, கடத்தல், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
6 பேர் கைது
இதில் போலீஸ்காரர்களான வேணுகோபால், பசவராஜு ஆகியோர் கோலார் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு மெய்க்காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர். மேலும் அவர்கள் போலீஸ்காரர்கள் என்பதால் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தல், கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் துணிகரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். போலீஸ்காரர்கள் என்பதாலும், நீதிபதியின் மெய்க்காவலர்கள் என்பதாலும் அவர்கள் எந்த குற்றவழக்கிலும் சிக்காமல் இருந்து வந்துள்ளனர். தங்களது கூட்டாளிகளையும் காப்பாற்றி வந்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மாலூர் பகுதியில் பதுங்கி இருந்த போலீஸ்காரர்கள் உள்பட அரசு ஊழியர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோலாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story