பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என புகார் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம்

பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என புகார் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Dec 2021 3:20 AM IST (Updated: 4 Dec 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

பணி தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என எழுந்த புகார் குறித்த விசாரணையின் அடிப்படையில் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

காரிமங்கலம்:
பணி தொடர்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என எழுந்த புகார் குறித்த விசாரணையின் அடிப்படையில் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.
புகார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் முருகன். இவர் துறை ரீதியான நிர்வாக பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், பணி தொடர்பான பதிவேடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்றும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பணி இடைநீக்கம்
இந்த நிலையில் விசாரணையின் அடிப்படையில் வட்டார கல்வி அலுவலர் முருகனை பணி இடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story