நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்


நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2021 3:20 AM IST (Updated: 4 Dec 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.83 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3-ந் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி அரசால் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி 8 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகளும், 9 பேருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், 7 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகளும், 5 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகளும், 8 பேருக்கு அதிரும் மடக்கு கோல்களும் வழங்கப்பட்டன.
மேலும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியம் வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 83 ஆயிரத்து 966 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன அதேபோல் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், தேசிய அடையாள அட்டையையும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story