சேலம் கோட்டத்தில் ரெயிலில் ஓசி பயணம்; 17 ஆயிரத்து 657 பேர் சிக்கினர் ரூ.97½ லட்சம் அபராதம் வசூல்


சேலம் கோட்டத்தில் ரெயிலில் ஓசி பயணம்; 17 ஆயிரத்து 657 பேர் சிக்கினர் ரூ.97½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 4 Dec 2021 3:44 AM IST (Updated: 4 Dec 2021 3:44 AM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதம் ரெயிலில் ஓசி பயணம் செய்த 17 ஆயிரத்து 657 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.97½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சூரமங்கலம்,
அதிகாரிகள் சோதனை
சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் இயக்கப்படும் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஏராளமானவர்கள் பயணம் செய்வதாக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளருக்கு புகார் வந்தது. இதையடுத்து அனைத்து ரெயில்களிலும் சோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
ரூ.97½ லட்சம் அபராதம்
அப்படி கடந்த மாதத்தில் (நவம்பர்) நடத்தப்பட்ட சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்தவர்கள், லக்கேஜ் கட்டணம் செலுத்தாதவர்கள், முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்கள் என 17 ஆயிரத்து 657 பேர் சிக்கினர். அவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப் பதிவு செய்து ரூ.97 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் அந்த பணம் வசூல் செய்யப்பட்டது.
இந்த சோதனை குறித்து ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கட்டாயம் எடுக்க வேண்டும். இதுதவிர லக்கேஜ் கொண்டு செல்லவும் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி இல்லாமல் ஓசியில் பயணம் செய்தாலோ, லக்கேஜ் கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில் பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Next Story