சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம், சம்சிகாபுரம் ஆகிய ஊர்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நூல் விலை உயர்வு மற்றும் ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து நேற்று காலை சங்கரன்கோவில் தேரடி திடலில் செங்குந்தர் முன்னேற்ற சங்கம் சார்பில் விசைத்தறி வேலை நிறுத்தம் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செங்குந்தர் முன்னேற்ற சங்க தலைவர் கந்தவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் முன்னேற்ற சங்க செயலாளர் செல்வகணேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story