நெல்லை மாநகரத்தில் 11 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
11 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
நெல்லை:
நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சுதர்சன், நெல்லை டவுனுக்கும், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் விமலன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்திற்கும், போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாட்ஷா, பெருமாள்புரத்திற்கும், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வித்யாலட்சுமி நெல்லை சந்திப்புக்கும், பாளையங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம்,- பெருமாள்புரத்திற்கும், சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி பெருமாள்புரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன், பாளையங்கோட்டைக்கும், பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கும், பெருமாள்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பிர ம்மநாயகம் டவுனுக்கும், சாலை ரோந்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தச்சநல்லூருக்கும், சந்திப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகைதீன் அப்துல் காதர், நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story