ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி மாயம்


ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி மாயம்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:57 PM IST (Updated: 4 Dec 2021 1:57 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற வடமாநில தொழிலாளி மாயமானார். அவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே அத்தமனஞ்சேரிரெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த சூளையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் துர்கா(வயது 24) என்பவர் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் சக தொழிலாளர்களுடன் குளிக்க சென்றார். தொடர்மழை காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

இந்த நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த விஜயகுமார் துர்கா திடீரெனமாயமானார். அவருடன் குளிக்க சென்ற சக தொழிலாளர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஆரணி ஆற்றில் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story