2 பெண்களிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
வேலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர்
வேலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 பவுன் சங்கிலி பறிப்பு
வேலூர் அருகே உள்ள கீழ்மொணவூரை சேர்ந்தவர் ஆஷா (வயது 30). இவர் நேற்று இரவு வேலூர் கொணவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
கொணவட்டம் சர்வீஸ் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென அவர்கள் ஆஷாவை மடக்கினர். மேலும் ஆஷாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க தங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷா கத்தி கூச்சலிட்டார். ஆனால் மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சர்வீஸ் சாலை வழியாக தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து ஆஷா வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதேபோல, வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் குமார் மனைவி விஜயலட்சுமி (40). இவர் நேற்று இரவு அவரது உறவினர் ஒருவருடன் புதுப்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காரமடை என்ற இடத்தில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story