வாணியம்பாடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற சிறப்பு முகாம்
வாணியம்பாடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற 8-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
திருப்பத்தூர்
-
வாணியம்பாடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற 8-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
528 அடுக்குமாடி குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக வளையாம்பட்டு திட்டப்பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
மறுகுடியமர்வு
இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு திருப்பத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டும், மேலும் நகர்புற வீடற்ற ஏழைகளுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை ேபாக மீதமுள்ள பங்குத்தொகையான ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் அனைவருக்கும் வீடு திட்ட விதிகளின்படி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வளையாம்பட்டு திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கி வசிக்க விரும்புவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை, மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள் உள்ளது என்றும் சான்றளிக்க வேண்டும்.
இதற்கான சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே லாலா ஏரி செல்லும் வழியில் வளையாம்பட்டு திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற முகவரியில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
பயன்பெறலாம்
இதில் பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவறறுடன் மேற்கண்ட இடத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story