புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனி
விழுப்புரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் நாப்பாளைய தெருவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டு 147-ம் ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தினமும் காலை திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் தேர் பவனியும் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை கூட்டு திருப்பலியும், இரவில் ஆடம்பர தேர் பவனியும் நடைபெற்றது. இதையொட்டி வண்ண, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் புனித பிரான்சிஸ் சவேரியார் சொரூபம் அமர்த்தப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
அதன் பிறகு ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, நேற்று கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story