299 முகாம்களில் கொரோனா தடுப்பூசி
நீலகிரி மாவட்டத்தில் 299 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 299 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதனை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு மேற்கொண்டார்.
தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
ஊட்டி, கூடலூர், குன்னூர், நெல்லியாளம் உள்ளிட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் 299 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஊட்டியில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உழவர் சந்தை, நொண்டிமேடு, சாந்தி விஜய் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்.
நெறிமுறைகளை பின்பற்ற உத்தரவு
அப்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்பட சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. இதில் முதல் தவணை தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோர் 430 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 289 பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோர் 4,295 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 7,033 பேரும் செலுத்தி கொண்டனர்.
Related Tags :
Next Story