கல்விக்கடனுக்கு 300 மாணவ-மாணவிகள் விண்ணப்பம்


கல்விக்கடனுக்கு 300 மாணவ-மாணவிகள் விண்ணப்பம்
x
தினத்தந்தி 4 Dec 2021 7:53 PM IST (Updated: 4 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

கல்விக்கடனுக்கு 300 மாணவமாணவிகள் விண்ணப்பம்

திருப்பூர்,
 திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் முகாமை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் பெறுவது குறித்து விளக்கி பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் உடனிருந்தார்.
விண்ணப்பத்தின் நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படங்கள், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விக்கட்டண விவரம், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் முகாமில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
. முகாமில் கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட 21 வங்கிகள் கலந்து கொண்டன. முகாமில் 300 பேர் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தனர். முகாமில் திறன் பயிற்சி மேம்பாடு, வங்கி சார்ந்த பிற தேவைகளுக்கான வழிகாட்டுதல் ஆகியவை வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை பரிசீலித்து விரைவில் கல்விக்கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
---------------------

----


Next Story