சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:52 PM IST (Updated: 4 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம்

சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பெரியதமிழன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் வினோத், வட்ட பொருளாளர் பரக்கத்துன்னிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் ஆனந்த் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வரதராஜன் சிறப்புரையாற்றினார். 

3 ஆண்டுகள் பணி முடித்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், புள்ளிவிவரங்கள் எடுக்க கால அவகாசம் இன்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் இன்றியும், ஒரே வேலையை பலமுறை செய்யச் சொல்லும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story