நகைக்கடையில் திருடிய பெண்கள்
தங்க சங்கிலி வாங்குவதுபோல் நடித்து பரமக்குடியில் 3 பவுன் நகை திருடிய பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பரமக்குடி,
தங்க சங்கிலி வாங்குவதுபோல் நடித்து பரமக்குடியில் 3 பவுன் நகை திருடிய பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தங்க மோதிரம்
பரமக்குடி பெரிய கடை பஜாரில் நகை கடை வைத்து இருப்பவர் ராஜேந்திரன் (வயது64). இவரது கடையில் புர்கா மற்றும் மாஸ்க் அணிந்து 2 பெண்கள் நகை வாங்க வந்துள் ளனர். பின்பு ராஜேந்திரனிடம் 2 கிராம் தங்க மோதிரம் வேண்டும் என கேட்டுள்ளனர். உடனே அவர் எடுத்து கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக்கொண்டு அதற்காக அவர்கள் கொண்டுவந்த பழைய நகையை கொடுத்து விட்டு மீதம் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளனர். பின்பு மீண்டும் 3 பவுன் எடையுள்ள தங்க செயின் வாங்குவதாக கூறி செயின் மாடல் களை பார்க்க கேட்டுள்ளனர்.
உடனே ராஜேந்திரன் 10 தங்க செயின்களை எடுத்துக்காட்டி உள்ளார். அந்த 2 பெண்களும் மாடல்களை பார்ப்பது போல் நடித்து 3 பவுன் எடையுள்ள 1 செயினை திருடிவிட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொண்டுவந்த கவரிங் செயினை வைத்துள்ளனர்.
அதிர்ச்சி
இது ராஜேந்திரனுக்கு தெரியவில்லை.
பின்பு அந்த இரண்டு பெண்களும் ஒரு செயினை காட்டி இதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் வைத்திருங்கள் அதற்கான தொகையை வீட்டிற்கு போய் எடுத்து வருகிறோம் எனக் கூறிச் சென்று உள்ளனர்.
ஆனால் திரும்பி வரவே இல்லை. உடனே ராஜேந்திரன் கடையில் உள்ள நகைகளை சரி பார்த்துள்ளார். அப்போது அந்த பெண்களிடம் எடுத்துக்காட்டிய 10 தங்க செயினில் ஒரு கவரிங் செயின் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விசாரணை
உடனே இது குறித்து அவர் பரமக்குடி நகர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பெண் களையும் தேடி வருகின்றனர். மேலும் ராஜேந்திரன் கடையில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நகை வாங்க வந்த அந்த இரண்டு பெண்களின் காட்சிகள் பதிவாகி உள்ளது. போலீசார் அந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story