குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Dec 2021 10:07 PM IST (Updated: 4 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நூத்துலாபுரம் கிராம மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நூத்துலாபுரம் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து துணை தலைவர் யாகப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story