தரைப்பாலம் மூழ்கியதால் 5 கிராம மக்கள் பாதிப்பு


தரைப்பாலம் மூழ்கியதால் 5 கிராம மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 11:02 PM IST (Updated: 4 Dec 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 5 கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  உயர்மட்ட மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருவமழை
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்மழையால் கண்மாய்கள், ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் உள்ள தரைப்பாலங்களில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் மழை நின்று 4 நாட்களாகியும் சில இடங்களில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் வரத்து தற்போது குறையாமல் செல்வதால் அந்த வழியாக மக்கள் சென்று வருவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்ற னர். 
தேவகோட்டை அருகே உள்ள உடையாகுளம் கிராமத்திற்கு செல்லும் வழியில் சருகணி, மணிமுத்தாறில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி உள்ளது. 
உயர்மட்ட பாலம்
 கடந்த 2005-ம் ஆண்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது படகு மூலம் கிராம மக்கள் அக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது 16 ஆண்டுகளுக்குபின் மீண்டும் இந்த தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலத்தில் வாகனம் மூலம் கடந்து செல்ல முடியாத நிலையில் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த தரைப்பாலத்தை கடந்து தான் உடையாகுளம், கருப் பகுடி, சின்னகாரைக்குடி, அனுக்கனேந்தல், கோவிந்தமங்கலம் ஆகிய 5 கிராம மக்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே  தமிழக அரசு இந்த தரைப்பாலத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து 5 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்கில் தடையின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story