மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Dec 2021 11:07 PM IST (Updated: 4 Dec 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

மணலூர்பேட்டை பகுதியில் மணல் கடத்தல் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் சு. கள்ளி பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சு.கள்ளிப்பாடி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

பின்னர் அந்த சாக்கு மூட்டைகளில் மணல் இருந்ததும் அதே கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் மணிகண்டன், சின்னப்பன் மகன் துரை உள்பட 3 பேர் அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 மோட்டார் சைக்கிள்களையும்  பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள். 

Next Story