கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி உண்ணாவிரதம்


கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லக்கோரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 Dec 2021 5:46 PM GMT (Updated: 4 Dec 2021 5:46 PM GMT)

கீரனூர் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் ரெயில் நிலையத்தில் நின்று செல்லக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கீரனூர்:
பாசஞ்சர் ரெயில்கள் 
கீரனூர் ரெயில் நிலையத்தில் திருச்சி-காரைக்குடி பாசஞ்சர் திருச்சி-ராமேஸ்வரம் பாசஞ்சர் ரெயில்கள் நின்று சென்று வந்தன. இதனால் பொதுமக்கள் கல்லூரி, மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வோருக்கு வசதியாக இருந்தது.  கொரோனா காலக்கட்டத்துக்குப் பின் மாற்றி அமைக்கப்பட்ட ரெயில்வே அட்டவணையில் கீரனூர் ரெயிவே நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
உண்ணாவிரதம் 
இதனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லை. மேலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் ரெயில்வே மந்திரிக்கு பரிந்துரை கடிதம் எழுதியும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கீரனூர் ரெயில் நிலையம் முன்பு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் அனைத்து கட்சியை சேர்ந்த வர்கள், வியாபார சங்க பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் தலைமையில், போலீசாரும், ரெயில்வே போலீசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story