மின்சார ரெயில் பாதை சரிபார்ப்பு பணி தீவிரம்


மின்சார ரெயில் பாதை சரிபார்ப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 4 Dec 2021 11:16 PM IST (Updated: 4 Dec 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து காரைக்குடி வரையிலான மின் ரெயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது அவற்றை சரி செய்யும் பணி நடந்துவருகிறது.

காரைக்குடி, 
திருச்சியில் இருந்து காரைக்குடி வரையிலான மின் ரெயில் பாதை அமைக்கப்பட்டு தற்போது அவற்றை சரி செய்யும் பணி நடந்துவருகிறது.
மின் வழிப்பாதை
மத்திய அரசின் ரெயில்வே துறை சார்பில் தற்போது அனைத்து ரெயில் பாதைகளையும் மின்சார மயமாக மாற்றி ரெயில்களை இயக்குவதற்கு தேவையான நவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக டீசல் பயன்பாட்டை குறைப்ப தற்காக இந்த மின் ரெயில் பாதை அமைக்கும் பணியை ரெயில்வேதுறை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக தென்னக ரெயில்வே பல்வேறு இரட்டை ரெயில் பாதைகளை மின் பாதைகளாக மாற்றுவ தற்கான நடவடிக்கைகளை எடுத்து அதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதம் உள்ள பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருச்சியில் இருந்து - காரைக்குடி வரையிலும், காரைக்குடியில் இருந்து -மானாமதுரை வரையும், மானாமதுரையில் இருந்து - ராமேசுவரம் வரையிலான அகல ரெயில் பாதை தற்போது மின் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. 
சோதனை ஓட்டம்
இதில் காரைக்குடி முதல் மானாமதுரை வரை பணிகள் முடிவடைந்து விட்டன. திருச்சி-காரைக்குடி, மானா மதுரை- ராமேசுவரம் ஆகிய பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மதுரையில் இருந்து மானாமதுரை வரையிலான மின்பாதை பணியும் நிறைவு பெற்ற நிலையில் நாளை அதில் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் திருச்சி முதல் காரைக்குடி வரையிலான அகல ரெயில் பாதை தற்போது மின் பாதைகளாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆய்வு
இதில் முதற்கட்டமாக திருச்சி முதல் புதுக்கோட்டை வரை பணிகள் முடிவடைந்து அதில் உள்ள மின்கம்பங்கள் வழியாக செல்லும் மின்சார வயர்களை சரிபார்க்கும் பணியும் நடைபெற்றது. தற்போது புதுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான உள்ள மின்பாதையில் அமைக்கப்பட்ட மின் வயர்களின் தரம் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து சரி பார்க்கும் பணிக்காக சிறப்பு ரெயில் மூலம் பணியாளர்கள், ரெயில்வே துறை அதிகாரிகள்  ஆய்வு செய்தனர்.  இந்த பணிகள் இம்மாதத்திற்குள் முடிவடைந்துமின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்பார்ப்பு 
மேலும் தற்போது தென்னக ெரயில்வே சார்பில் பல இடங்களில் மின்சார ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகிற 2023-ம் ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் முழுவதுமாக நிறை வடைந்து இந்த பாதையில் மின்சார ரெயில் ஓடத் தொடங் கினால் ரெயில்வே துறைக்கு ஆண்டிற்கு ரூ.11ஆயிரம் கோடி வரை லாபம் கிடைக்கும் என தெரிகிறது.

Next Story