கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
கந்தர்வகோட்டை:
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை வேல் மகன் உறுமையா (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கந்தர்வகோட்டை வந்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்த தனியார் பார்சல் சர்வீஸ் சரக்கு லாரி எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் உறுமையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறுமையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். உயிரிழந்த உறுமையாவிற்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story