தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி


தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 12:18 AM IST (Updated: 5 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

காரியாபட்டி
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் காதர் உசேன் (வயது 21). இவர் காரியாபட்டி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி காதர் உசேன் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். 
இந்தநிலையில் தன்னுடன் படித்த நண்பர்களை பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி விலக்கு அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த காதர் உசேன் சம்பவ இடத்திலேயே பலியானார். 
விசாரணை
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காரியாபட்டி போலீசார் விரைந்து சென்று காதர் உசேன் பிணத்தை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story