அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
தளவாய்புரம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர்-கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தளவாய்புரம்
தளவாய்புரம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர்-கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சக்கரம் ஏறியது
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45), கட்டிட கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் நேற்று காலை 8 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து கூனங்குளம் செல்லும் அரசு பஸ்சில் சிவன்கோவில் பஸ் நிறுத்தத்தில் ஏறினார்.
பின்னர் இவர் அயன்கொல்லங்கொண்டான் பஸ் நிறுத்ததில் இறங்கினார். அப்போது அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க டயர் இவர் மீது ஏறி இறங்கியது. இதில் இவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
கைது
பின்னர் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து எஸ்.ராமலிங்க புரத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் பாண்டியராஜ் (56), கண்டக்டர் ராஜபாளையத்தை சேர்ந்த காளிமுத்து(வயது 51) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story