வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் திறப்பு


வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 12:18 AM IST (Updated: 5 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அணையில் தண்ணீர் திறப்பு

தாயில்பட்டி, டிச.5-
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் உயரம் 24 அடி. இந்த அணையில் 20 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அணை திறக்கப்படுவதால் கரையோரங்களில் உள்ள கோட்டைப்பட்டி, விஜயகரிசல்குளம், சேதுராமலிங்காபுரம் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அணை திறப்பதற்கு முன்பு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பிச்சை ராஜ் ஆகியோர் அணையை பார்வையிட்டனர். அணை திறக்கப்படும் என தகவல் பரவியதால் ஏராளமானவர்கள் அணை திறக்கப்படுவதை பார்க்க குவிந்தனர். வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டார். செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் சிந்தியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் 12 ஆண்டுக்கு பிறகு வெம்பக்கோட்டை அணை  நிரம்பியுள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 6,300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. திறக்கப்படும் தண்ணீர் வைப்பாற்றில் செல்வதால் அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ேமலும் வெம்பக்கோட்டை கண்மாய் நிரம்பி வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் மருதமலை நகர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது.

Next Story