பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை


பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 5 Dec 2021 12:18 AM IST (Updated: 5 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் சப்-இன்ஸ்ெபக்டர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதிபோடு காலனியில் வசித்து வருபவர் பாக்கியமேரி(வயது 50). இவர் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஜான் பிரிட்டோ. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் பாக்கியமேரி இரவு பணிக்காக வத்திராயிருப்பு அருகே உள்ள புதுப்பட்டியில் பணியில் இருந்து வந்தார். அவரது கணவரும் பணிக்காக சென்று விட்டார். 
நேற்று காலை சுமார் 6 மணியளவில் ஜான்பிரிட்டோ பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது  வீட்டின் பீரோவில் இருந்த 14 பவுன் மற்றும் ரூ.28 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பரபரப்பு
இதைதொடர்ந்து வத்திராயிருப்பு புதுப்பட்டி பகுதியில் பணியில் இருந்த தனது மனைவி பாக்கிய மேரிக்கு தகவல் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 
விருதுநகரிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். விருதுநகரில் இருந்து மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. 
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் சுமார் 14 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
கொள்ளையர்கள் 3 பேர் காரில் வந்து கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 
எனவே காரில் வந்து கொள்ளையடித்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story