பூக்கள் விலை தொடர்ந்து உயர்வு
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மல்லிகை கிேலா ரூ.1,500-க்கு விற்பனையானது.
நாகர்கோவில்,
தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மல்லிகை கிேலா ரூ.1,500-க்கு விற்பனையானது.
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருேக தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.
தோவாளை பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.300 உயர்ந்து ரூ.1,500-க்கு விற்பனையானது. இதுபோல், நேற்று முன்தினம் ரூ.1,100-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.1,250-க்கு விற்பனையானது. மேலும், கனகாம்பரம், முல்லை ஆகியவை ரூ.1,200-க்கு விற்பனையானது.
காரணம் என்ன?
பூக்களின் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், சந்தைக்கு குறைவான பூக்களே விற்பனைக்கு வருகிறது.
ஆனால், சபரிமலை சீசனை முன்னிட்டும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டும் தேவை அதிகமாக உள்ளது. இதனால், பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, என்றார்.
விலை விவரம்
தோவாளை மார்க்கெட்டில் பிற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளிப்பூ ரூ.450, வாடாமல்லி ரூ.100, சிவப்பு கேந்தி ரூ.100, சம்பங்கி ரூ.170, ரோஜா (100 எண்ணம்) ரூ.40, பட்டன்ரோஸ் ரூ.220, துளசி ரூ.40, தாமரை (100 எண்ணம்) ரூ.1,500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.100, கொழுந்து ரூ.150, மருக்கொழுந்து ரூ.160, மஞ்சள் கேந்தி ரூ.120, சிவந்தி (மஞ்சள்) ரூ.180, வெள்ளை சிவந்தி ரூ.220, ஸ்டெம்பு ரோஸ் (1 கட்டு) ரூ.370 என விற்பனையானது.
Related Tags :
Next Story