16 வயது மகளுடன் மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம்


16 வயது மகளுடன் மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:44 AM IST (Updated: 5 Dec 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே 16 வயது மகளுடன் மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறியும் கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு அருகே 16 வயது மகளுடன் மாயமான பெண் கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறியும் கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மகளுடன் மாயம்
கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 41 வயதுடைய மனைவியும், 16 வயதுடைய மகளும் உள்ளனர். கடந்த மாதம் அந்த பெண் தனது 16 வயது மகளுடன் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர், அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பெண்ணின் கணவர் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாயமான தாய், மகளை போலீசார் தேடி வந்தனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்தநிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது மகளையும் கூட்டிக்கொண்டு சுமார் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருடன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. 
அதாவது, அந்த வாலிபர் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர். கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டாக கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்து சென்றார். அப்போது வரும் வழியில் இந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காலப்போக்கில்  கள்ளக்காதலாக மாறியது. 
இந்த நிலையில் கள்ளக்காதலனை பிரிய முடியாத பெண் தனது 16 வயது மகளையும் அழைத்து கொண்டு வாலிபருடன் சென்றுள்ளார். அவர்கள் கேரளாவில் தலைமறைவாக வாழ்ந்துள்ளனர். தற்போது போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் கள்ளக்காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 
கணவருடன் செல்ல மறுப்பு
இதையடுத்து போலீசார் பெண்ணின் கணவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர், ெபண்ணுக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லுமாறு கூறினர். அந்த பெண் கணவருடன்  செல்ல மறுத்து கள்ளக்காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். 
ஆனால், மகளின் எதிர்கால நலனை கருதி கள்ளக்காதலனுடன் பெண்ணை அனுப்ப போலீசார் மறுத்தனர். இதையடுத்து பெண்ணும், கணவரும், கள்ளக்காதலனும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story