மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + dailythanthi complent box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
 பெயர் பலகை தேவை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. ஆனால் எந்த விதமான அறிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேளாண்மை அலுவலகத்திற்கு செல்ல வசதியாக பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                    
   -பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
 குப்பைத்தொட்டி வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலநடுக்காவேரி மெயின் ரோட்டில் பிள்ளையார் கோவில் உள்ளது. கோவிலையொட்டி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி குப்பைகள் அழுகி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பைத்தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மேலநடுக்காவேரி.
 குப்பைகள் அகற்றப்பட்டன
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் நுழைவுவாயில் அருகே சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள, மற்றும் குப்பைகள் தேங்கி மலைபோல் குவிந்து இருந்தது.இதனை சுட்டிகாட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி கிருமிநாசினி தெளித்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
-பொதுமக்கள், பாலாஜிநகர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
5. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-