கழிவறைக்காக தோண்டிய குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி ஆண் குழந்தை பலி


கழிவறைக்காக தோண்டிய குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி ஆண் குழந்தை பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 1:38 AM IST (Updated: 5 Dec 2021 1:58 PM IST)
t-max-icont-min-icon

கழிவறைக்காக தோண்டிய குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

செந்துறை:

நீர் நிரம்பிய குழி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி கனிமொழி. ராமச்சந்திரன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் ராம் பிரசாத்(வயது 2).
இவர்களது வீட்டின் பழைய கட்டிடத்தின் அருகே கழிவறை கட்ட குழி தோண்டப்பட்டு இருந்தது. கடந்த பல நாட்களாக பெய்த கனமழையால் அந்த குழியில் நீர் நிரம்பி வழிந்தது.
தண்ணீரில் மூழ்கி சாவு
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே ராம் பிரசாத் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த குழியில் அவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இதையறியாத கனிமொழி, ராம் பிரசாத்தை அப்பகுதியில் தேடினார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் வந்து குழியில் இறங்கி தேடிப் பார்த்தபோது ராம் பிரசாத் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை மீட்டனர். ராம்பிரசாத்தின் உடலை கண்டு கனிமொழி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story