மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்
மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது.
பெரம்பலூர்:
வைகுண்ட ஏகாதசி விழா
பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனி சன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதியன்று காலை 6 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவிற்கு 10 நாட்கள் முன்னதாக பகல்பத்து உற்சவமும், சொர்க்கவாசல் திறப்பு உற்சவத்தை தொடர்ந்து 10 நாட்களுக்கு ராப்பத்து உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் உற்சவ பெருமாள், வண்ண மலர்களால் அலங்கரித்து பல்லக்கில் வைக்கப்பட்டு சன்னதி பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
மோகினி அலங்காரம்
விழாவில் முக்கிய உற்சவங்களான மோகினி அலங்கார நிகழ்ச்சி 13-ந்தேதியும், 23-ந்தேதி ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் சுவாமி பிரகார உலா நடக்கிறது. ராப்பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவ பெருமாள் கோவிலுக்கு வெளியே வந்து ஆஞ்சநேயர் கம்பத்தை வலம் வந்து மீண்டும் கோவிலை அடையும் நிகழ்ச்சி நடக்கிறது.
Related Tags :
Next Story