ரேஷன் கடைகளில் கடைபிடிக்கப்படாத சமூக இடைவெளி
ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை.
பெரம்பலூர்:
முககவசம் அணிவதில்லை
கொரோனா 2-ம் அலை ஓய்ந்து வரும் நிலையில், 3-ம் அலை வராமல் தடுக்கவும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணிவது இல்லை. மேலும் சமூக இடைவெளி கடைபிடிப்பதும் இல்லை. ரேஷன் கடைகளில் பயோ-மெட்ரிக் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக இடைவெளி கடைபிடிப்பதில்லை
ஆனால் ரேஷன் கடைகளில் கைகளை சுத்தம் செய்ய சோப்பு, தண்ணீர், கிருமி நாசினி வைக்கப்படுவதில்லை. ரேஷன் கடை முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டமும் போடப்படவில்லை. இதனால் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்காமல் ஒருவரை ஒருவர் உரசிக்கொண்டும், கூட்டமாகவும் நிற்கின்றனர். ரேஷன் கடை ஊழியர்களில் சிலர் முககவசம் அணிவதில்லை.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், ரேஷன் கடைகளினால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ரேஷன் கடைகளில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
===========
பட புட்நோட்
2 படங்கள் சேர்த்து 3 காலம்
சிறுவாச்சூரில் உள்ள ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வாங்க வந்தவர்கள் முககவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நின்றதையும், துறைமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வாங்க வந்தவர்கள் கூட்டமாக நின்றதையும் படத்தில் காணலாம்.
உணவு பொருட்களின் எடை குறைவாக உள்ளது
எடை குறைவாக பொருட்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சில ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் உணவு பொருட்களின் எடை குறைவாக உள்ளதாகவும், சில உணவு பொருட்கள் கிடைப்பது இல்லை என்றும் குடும்ப அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில ரேஷன் கடைகளில் போதிய அளவு ஊழியர்கள் இல்லாமல் வெளிநபர்கள் பணிபுரிவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. ரேஷன் கடைகளில் உள்ள குறைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story