ஓசூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வாலிபர் கைது


ஓசூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 1:41 AM IST (Updated: 5 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஓசூர்:
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தை சார்ந்த மகபூப் பாஷா. இவருடைய மகன் சேக் முகமது அப்சல் (வயது21). தனது தம்பியுடன் ஓசூர் ராம்நகரில் உறவினர் வீட்டில் தங்கி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் தனியார் தொழிற்சாலையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி, ஓசூர் பாரதிதாசன் நகருகே வள்ளுவர் நகரில் அவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காலங்கள் இருந்தது. இதுதொடர்பாக, ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரை பிடித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஷேக்முகமது அப்சலை, ராஜேசும், அவரது நண்பர் திலீப்குமார் என்பவரும் கடத்தி சென்று கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் ராஜேசை ஏற்கனவே கைது செய்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த திலீப்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story