பேரிகை அருகே மொபட் மீது வாகனம் மோதி ஊராட்சி பணியாளர் சாவு மனைவி படுகாயம்
பேரிகை அருகே மொபட் மீது வாகனம் மோதி ஊராட்சி பணியாளர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
ஓசூர்:
பேரிகை அருகே மொபட் மீது வாகனம் மோதி ஊராட்சி பணியாளர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.
வாகனம் மோதியது
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் அருகே உள்ள அப்பையன்னா அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடகிரியப்பா (வயது 52). ஊராட்சி குடிநீர் வினியோக பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவரும், அவரது மனைவி லட்சுமியம்மாவும் (51) மொபட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே காட்டிநாயக்கன்தொட்டி வழியாக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த வெங்கடகிரியப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி லட்சுமியம்மா படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடகிரியப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி கண் முன்பே கணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story